கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - கலவர பூமியாக மாறிய லாஸ்ஏஞ்சல்ஸ்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கருப்பினத்தவரின் மீது இனவெறி தாக்குதல் நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-28 07:40 GMT
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கருப்பினத்தவரின் மீது போலீசார் இனவெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ததாகக் கூறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதற்கு கலவரக்காரர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியே கலவர பூமியாக மாறியது.  வெள்ளை இனத்தை சேர்ந்த போலீசார் 4 பேர் பொது இடத்தில் கருப்பினத்தவரின் கழுத்தின் மீது தங்களது கால்களை மடக்கி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, ஆத்திரம் அடைந்த மக்கள் லாஸ் ஏஞ்சல் நகரில் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இச்சம்பவத்தில்  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்