"கோ கூரியர்ஸ்" பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-05-05 01:46 GMT

கொரியர் டெலிவரி செய்யும் உரிமை வழங்குவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை அசோக் நகர் பகுதியில் கோ கொரியர் எனும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரியர் பார்சல் டெலிவரி செய்யும் உரிமையைப் பணம் கட்டி பின்கோடுக்கு ஏற்றார் பெற்றுக் கொள்ளலாம் என்றும், டெலிவரி செய்யப்படும் பார்சலின் விலையில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து பின்கோடு வாங்கிய நபர்களுக்கு வழங்குவதாகவும் கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர்... இதில் இணைய விரும்புபவர்கள் முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி டெலிவரி செய்யும் பின்கோடு எண்ணைப் பெற்ற பின்னர், 2 முதல் 5 லட்ச ரூபாய் செலுத்தி டெலிவரி செய்யும் உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்ட நிலையில், இதை நம்பி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்து பின்கோடு எண்ணைப் பெற்றுள்ளனர். ஆனால் எந்தவித பார்சல்களும் டெலிவரிக்கு வழங்கப்படாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்நிறுவனத்தின் அலுவலகத்தை வந்து பார்த்தபோது, அவ்விடம் காலி செய்யப் பட்டிருந்ததுடன், 2 மாதங்கள் வரை வாடகை பணமும் செலுத்தாதது கண்டறியப்பட்டது... இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். ஆனால் அவர்களுக்கு முன்பாக கோ கொரியர்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றிய தீபா, ஆந்திராவைச் சேர்ந்த அவரது நண்பர் இருவரும் தங்கள் முதலாளிகள் தங்களை ஏமாற்றி விட்டதாக அங்கு புகாரளித்துள்ளனர். இரு தரப்பு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்