காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 00:57 GMT
  • நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது...... தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் பேர் எழுதுகிறார்கள்..... 
  • நாடு முழுவதும் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், ஹால் டிக்கெட்டில் தெரிவித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.... தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வருமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தல்....
  • காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்..... 5 வீரர்கள் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு.... 
  • பணிப்பெண் கடத்தல் வழக்கில் சிக்கிய எச்.டி. ரேவண்ணாவுக்கு முன்ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிரடி கைது....... இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டம்.........
  • நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில், டிஐஜி மூர்த்தி ஆய்வு...... 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல்.... 
  • நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் புலன் விசாரணைக்கு பின்னரே உண்மை தெரியவரும்.... நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் விளக்கம்..... 
  • திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து........
  • ஆவியூர் கல்குவாரி பணிகளை நிறுத்திவைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..... விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை....
  • காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு 17ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.... கோவை மத்திய சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு..... 
  • கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு.... சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.... 
  • தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை.....
  • பிற்பகலில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை.... இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா - லக்னோ அணிகள் மோதல்..... 
Tags:    

மேலும் செய்திகள்