ஆந்திராவில் உள் மாநில பேருந்து போக்குவரத்து துவக்கம் - சமூக இடைவெளியுடன் பயணித்த பயணிகள்

ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 58 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை 7 மணி முதல் உள்மாவட்ட போக்குவரத்து தொடங்கியது.

Update: 2020-05-21 07:15 GMT
ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 58 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை 7 மணி முதல் உள்மாவட்ட போக்குவரத்து தொடங்கியது. மாநிலத்தின் 436 வழித்தடங்களில் ஆயிரத்து 683 பேருந்து இயக்கப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 12 ஆயிரம்  பேருந்துகள் உள்ள நிலையில் தற்பொழுது 17 சதவிகிதம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு சமூக இடைவெளியுடன் பேருந்தில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஒரு பேருந்திற்கு 20 முதல் 30 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்