"இது நல்லதல்ல" - ஆந்திராவில் திருமாவளவன் ஆவேசம் | thirumavalavan

Update: 2024-05-08 05:23 GMT

மோடி மீண்டும் பிரதமராவது நாட்டுக்கு நல்லதல்ல என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் கோவிந்தப்பாவை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது தேசத்திற்கும், மக்களுக்கும், ஜனநாயகத்திற்கு நல்லதில்ல என்றார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எரிந்து விடுவார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்