800 ட்ரோன்களை வைத்து பிரம்மாண்ட லோகோ.. ஜொலி ஜொலித்த ஒலிம்பிக் தீபம்.. வியக்க வைக்கும் காட்சி

Update: 2024-05-08 05:19 GMT

ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் நாட்டுக்கு வருவதையொட்டி, அந்நாட்டின் துறைமுக நகரமான மார்செய்லியில், கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, கிரிஸ் நாட்டில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபம், பல்வேறு நாடுகள் வழியாக தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறது. ஒலிம்பிக் தீபம் இன்று, பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரமான மார்செய்லிக்கு இன்று வருகிறது. இதையொட்டி, நேற்றிரவு வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அப்போது, 800 ட்ரோன்களை கொண்டு, ஒலிம்பிக் லோகோ, ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்படும் கப்பல், ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வரும் வீராங்கனை உள்ளிட்ட உருவங்கள் உருவாக்கிக் காட்டப்பட்டன. இன்று ஒலிம்பிக் தீபம் ஏற்றும் விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில், பிரான்ஸ் அதிபரும், 1.5 லட்சம் பொதுமக்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்