ரூம் வாடகை கொடுக்கவே கஷ்டபட்ட உலகின் நம்பர் 1 பணக்காரர்..!

பணக்கார வீட்டு பையன் என்பதால் தான் எலான் மஸ்க் வாழ்க்கையில் எளிதில் சாதித்துவிட்டதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், தான் கல்வி கடன் பெற்று படித்ததை மஸ்க் நினைவு கூர்ந்திருப்பது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

Update: 2022-05-05 22:14 GMT
சாலையில் செல்லும் எலெக்ட்ரிக் கார் முதல் விண்வெளியில் பறக்கும் ராக்கெட் வரை இவருடையது தான்... என சொல்லும் அளவிற்கு இன்று அண்ணாந்து பார்க்கும் உயரத்தை எட்டியிருப்பவர், உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்... 

ட்விட்டர் சர்ச்சைக்கு பெயர்போன அவர் வசமே,  ட்விட்டர் நிறுவனம் சென்றது முதல், சமூக வலைத்தளங்களில் மஸ்க் பற்றிய பேச்சு றெக்கை கட்டி பறக்கிறது.. 

அப்படி கிளம்பியிருக்கும் புதிய டாப்பிக் தான் இது... 
மஸ்க்கின் பெற்றோர் பணக்காரர்கள் என்பதால் தான் அவர் வாழ்க்கையில் ஈஸியாக வெற்றி பெற்றுவிட்டதாக பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்... 

அதிலும் மஸ்க்கின் தந்தை ஆப்பிரிக்காவில் சொந்தமாக மரகத சுரங்கம் வைத்திருப்பதாகவும், பணக்கார வீட்டு பிள்ளையான மஸ்க் படித்து முடித்தவுடன் வேலையின்றி சுற்றி வந்ததாகவும்  கூட பல கட்டுக்கதைகள் உலவி வந்தன. 

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொறுமை காத்து வந்த மஸ்க்... திடீரென என்ன நினைத்தாரோ..?... விமர்சனங்களுக்கு ட்விட் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

அதிலும் "பணக்கார குழந்தைகளை விட ஒன்றுமே இல்லாதவர்களுக்கு  தான் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்"  என தெரிவித்த மஸ்க்... 

தானே உருவாக்கிய கம்ப்யூட்டர் மற்றும் கையில் உள்ள சில டாலர்களை வைத்து கொண்டு தான்... 1995 ஆம் ஆண்டு முதன் முதலில் சிப்2 என்ற நிறுவனத்தை தொடங்கி யதாகவும், அப்போது தனது பெயரில் இந்திய ரூபாய் மதிப்புப்படி, 76 லட்ச ரூபாய் கல்வி கடன் இருந்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்... 

அதோடு கல்லூரி படித்த காலத்தில் தான் தங்கியிருந்த அறையை இரவில் நைட் கிளப்பாக செயல்பட வைத்து, வாடகையாக மாதம் 5 டாலர் சம்பாதித்து, அதன் மூலமே தனது ரூம் வாடகையை கட்டியதாகவும் கூறியுள்ளார். 

இப்படி தென் ஆப்பிரிக்காவில் பணக்கார வீட்டில் பிறந்திருந்தாலும் கூட... தனது சொந்த உழைப்பின் மூலம் இந்த உயரத்தை அடைந்திருப்பதாக மஸ்க் கூறியிருப்பது  நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும், 

தனது 12வது வயதிலேயே வீடியோ கேம் ஒன்றை உருவாக்கி அதனை விற்று பணம் சம்பாதித்தவர், எலான் மஸ்க் என்பதால் இவர் உலக பணக்காரர் ஆனதில் ஆச்சரியம் ஏதும் இல்லை....! என்பதே உண்மை. 

Tags:    

மேலும் செய்திகள்