ஆக்ஸ்போர்டு பல்கலை - ஆஸ்டிரா செனிகாவின் கூட்டு முயற்சி : "70% சிறப்பான பலனளிக்கும் கொரோனா தடுப்பு மருந்து"

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்டிரா செனிகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, 70 சதவீதம் சிறப்பான பலனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2020-11-23 12:31 GMT
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்கும் தடுப்பு மருந்து தயாரிப்பில், நம்பிக்கை தரக்கூடிய பல செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரா செனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்து, சராசரியாக 70 சதவீதம் சிறப்பான பலன்களை அளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தடுப்பு மருந்தை முதல்முறையாக பயன்படுத்திய போது, 90 சதவீதமும், ஒரு மாதத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பயன்படுத்திய போது, 62 சதவீதமும் பலனளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சராசரியாக 70 சதவீதம் சிறப்பான பலன்கள் கிடைத்துள்ளதால், அவசர கால தேவைக்கு பயன்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதியை கோரவுள்ளதாக ஆஸ்டிரா செனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்