இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-06 15:52 GMT

397 அரசு பள்ளிகளில், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்...

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என் தேர்வு துறை இன்று அறிவிப்பு...


3ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு...

குஜராத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களிக்க உள்ளார்...


தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் இன்று அதிரடி உத்தரவு...


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கண்டனம்...

சீரான மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்...


படுகாயமடைந்த சிறுமிக்கு வரும் 9ஆம் தேதி அறுவை சிகிச்சை...

நாய்களின் உரிமையாளர்களான ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு....


எம்எல்ஏ ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன்...

ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு...


கன்னியாகுமரி அருகே ராட்சத அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் இன்று உயிரிழப்பு...

கடல் சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், 2 நாட்களில் மொத்தம் 8 பேர் பலியானதால் அதிர்ச்சி...

Tags:    

மேலும் செய்திகள்