மிகப்பெரிய மாரத்தான்.. ஜப்பான் வீரர் புதிய சாதனை

Update: 2024-05-06 10:01 GMT

முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு நடக்கக் கூட முடியாமல் சிரமப்படுபவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற "விங்ஸ் ஃபார் லைஃப் வேர்ல்ட் ரன்" எனும் மாரத்தானில் உலகம் முழுவதும் 169 நாடுகளில் இருந்து 2 லட்சத்து 65 ஆயிரத்து 818 பேர் பங்கேற்றனர்... ஓட முடியாதவர்களுக்காக ஓடுதல் எனும் நோக்கத்துடன் ஓட்டப்பந்தய வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்... 70.09 கிலோமீட்டர் தூரம் ஓடி ஜப்பானின் டொமோயா வதனாபே ஆண்களுக்கான பிரிவில் புதிய சாதனை படைத்தார்... அதே சமயம், போலந்தின் டொமினிகா ஸ்டெல்மாக் 55.02 கிலோமீட்டர் தூரம் ஓடி பெண்களுக்கான பிரிவில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 72 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்