`டைட்டானிக்’ பட நடிகர் மரணம் - அதிர்ச்சியில் ஹாலிவுட்

Update: 2024-05-06 09:37 GMT

டைட்டானிக், தி லார்ட் ஆப் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் காலமானார். அவருக்கு வயது 79. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் 1944-ல் பிறந்த பெர்னார்ட் ஹில், நாடக கலையில் டிப்ளோமா முடித்தவர். 1982-ல் வெளிவந்த காந்தி படத்தில் நடித்துள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக் படத்தில் கப்பல் கேப்டனாக எட்வர்ட் ஜே.ஸ்மித் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். தி ஸ்கார்பியன் கிங், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போன்ற படங்களிலும் நடித்து பிரபலமாக அறியப்பட்டவர்.

அமெரிக்க நடிகை மரியானாவை மணந்த இவருக்கு, கேப்ரியல் என்ற மகன் உள்ளார். நடிகர் பெர்னார்ட் ஹில் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்