வெனிசுலா வான்வெளி திறப்பு - டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலாவின் வான்வெளியை திறக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்கு சென்று முதலீட்டு வாய்ப்புகளை ஆராய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த முடிவு, அமெரிக்கா-வெனிசுலா உறவுகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது