ஈரானின் புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக அர்ஜென்டினா அறிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி ஆட்சியில், சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூர இன அழிப்பு நிகழ்வான சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு நாள் அர்ஜென்டினாவில் அனுசரிக்கப்பட்டது... இதில் கலந்து கொண்ட அர்ஜென்டினா அதிபர் மிலேய் பியூனோஸ், யூத விரோதத்தை பொறுத்துக் கொள்ளவே முடியாது என குறிப்பிட்டார்.. பயங்கரவாதம் மற்றும் யூத விரோதத்தால் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த மிலேய், ஈரானின் புரட்சிகர காவல் படையை அர்ஜென்டினா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன் காசாவின் ஹமாசும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.