America | Trump | பச்சைக்கொடி காட்டிய டிரம்ப் | திடீர் மனமாற்றத்தின் காரணம்?
“தென்கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும்“-டிரம்ப் பச்சைக்கொடி
அமெரிக்க அதிபர் டிரம்ப், தென் கொரியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தென் கொரியாவுடன் உடன்பாடு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தென் கொரிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு செய்யப்பட்ட முதலீட்டு ஒப்பந்தத்தின் சில அம்சங்களை நிறைவேற்றவில்லை என கூறி, தென் கொரிய கார்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு சுங்கவரி உயர்த்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். தென் கொரிய நாடாளுமன்றம் பிப்ரவரியில் கூடவுள்ள நிலையில், அமெரிக்க முதலீட்டை செயல்படுத்தும் 5 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. அவை பிப்ரவரியில் நிறைவேறும் என ஆளும் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில், தென்கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என டிரம்ப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.