இத்தாலியின் மிலானோ கார்டினாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடங்க உள்ள நிலையில், ஒலிம்பிக் தீபம் ஏந்திச் செல்லும் நிகழ்வு பனியால் மூடப்பட்ட பயத்லான் (Biathlon) விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.
பனிப்பொழிவு சூழ்ந்த விளையாட்டு மைதானத்தில், பாரம்பரியத்தையும் விளையாட்டு உற்சாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தீபம் எடுத்துச் செல்லப்பட்டது. ஒலிம்பிக் தொடங்க இருக்கும் சான் சிரோ மைதானத்திற்கு பிப்ரவரி 6ம் தேதி, ஒலிம்பிக் தீபம் சென்றடையும்..