Thailand Cambodia War | விஷ்ணு சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலை - தாய்லாந்து எல்லையில் பதற்றம்
விஷ்ணு சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலையால் தாய்லாந்து எல்லையில் பதற்றம் நீடிப்பு
தாய்லாந்து - கம்போடியா எல்லையில், முன்பு இடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை தாய்லாந்து நிறுவியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இருநாடுகளுக்கிடையிலான மோதலின்போது எல்லையில் உள்ள ஆன் செஸ் பகுதியில் 27 அடி உயர விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் இடித்துத் தள்ளியது.
இந்த விவகாரத்தில் இந்தியா கவலை தெரிவித்து, மத உணர்வுகளை புண்படுத்தும் செயல்களை தவிர்க்க வேண்டும் என கூறியது.
ஆன் செஸ் பகுதி தங்களுக்கு சொந்தமான இடமென்றும், இடிக்கப்பட்ட விஷ்ணு சிலை வழிபாட்டில் இல்லை எனவும் தாய்லாந்து விளக்கமளித்தது.
இந்த சூழலில் இடிக்கப்பட்ட விஷ்ணு சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை தாய்லாந்து நிறுவியுள்ளது.
இதனால் காட்டமான கம்போடியா இது தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் செயல் என கண்டித்துள்ளது.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், எல்லை, நில உரிமை மற்றும் மதச் சின்னங்கள் தொடர்பான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.