டொரான்டோவில் கடும் பனிப்பொழிவு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கனடாவிலும் பனிப்புயல் காரணமாக பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டொரான்டோ Toronto நகரில் சாலைகள் மற்றும் வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீடுகளுள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் 60 சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்றும், இரவிலும் பனிப்புயல் தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.