Ali Khamenei | உயிருக்கு பயந்து ஓடினாரா கமெனி? - மும்பையில் இருந்து வந்த திடீர் குரல்

Update: 2026-01-26 05:19 GMT

ஈரானின் அலி கமெனி பதுங்கியதாக வெளியான தகவல் வதந்தி

ஈரான் மத தலைவர் காமெனி அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல்களால் முன்னெச்சரிக்கையாக பதுங்குக் குழியில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு ஈரான் தரப்பு மறுத்துள்ளது.

பொருளாதாரத் தடைகளாலும், அமெரிக்க அச்சுறுத்தல்களாலும் ஈரானின் மத தலைவர் காமெனிக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது...

ஆனால் அவர் பதுங்கு குழியில் ஒளிந்து கொள்ளவில்லை... என மும்பையில் உள்ள ஈரான் துணை தூதர் சயீத் ரேசா தெரிவித்துள்ளார்...

ஈரான் நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகளால் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் பாதுகாப்புப் படையின் அடக்குமுறையே வன்முறைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த கலவரங்களை வெளிநாட்டு உளவுத்துறைகள் தான் தூண்டியதாக அமெரிக்கா, இஸ்ரேலை சுட்டிக்காட்டி சாடினார்...

கலவரம் 2 நாட்களுக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறிய அவர், எந்த வெளிநாட்டு தாக்குதலுக்கும் ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்தார்...

அமெரிக்க தடைகள் தொடர்ந்தாலும், ஈரான் - இந்தியா இடையிலான ஒத்துழைப்பு வலுப்பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்..

தடைகளால் வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும்... மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்..

ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், எந்த வெளிநாட்டவரும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் உறுதியளித்தார்.

“காமெனி பதுங்கியதாக வெளியான தகவல் வதந்தி“

Tags:    

மேலும் செய்திகள்