மெக்சிகோ கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி
மெக்சிகோவில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
மெக்சிகோவின் சலமன்கா நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி முடிந்ததும் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் சிக்கிய சிறுவனின் தாய் ஒருவர்... உதவி கேட்டு தன் மகன் அழைத்த அந்த தொலைபேசி அழைப்பு தன் உயிரையே உறைய வைத்து விட்டதாக கலங்கினார்.
ஆயுதம் தாங்கிய குழு தாக்கியதாகவும், தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் நகர மேயர் சீசர் தெரிவித்தார். குவானஜுவாட்டோ மாநிலம் நீண்ட காலமாக போதைப்பொருள் கும்பல்களின் அதிகாரப் போட்டியால் மிகுந்த வன்முறைக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.