ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தகவல்
ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் “மிக நல்ல விஷயங்கள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஐவா மாநிலத்திற்குச் செல்லும் முன் வெள்ளை மாளிகையை விட்டு புறப்பட்டபோது இந்த தகவலை வெளியிட்டார். இதற்கிடையில், அமெரிக்க அதிகாரிகளின் நடுவர் முயற்சியுடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் பேச்சுவார்த்தை குழுக்கள் கடந்த வார இறுதியில் அபுதாபியில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.