USvsIran | ``வெனிசுலாவுக்கு அனுப்பியதை விட பெரும் படை’’ - டிரம்ப் அறிவிப்பால் கிடுகிடுக்கும் உலகம்

Update: 2026-01-29 02:54 GMT

"ஈரான் மீதான அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்" - டிரம்ப்

ஈரான் மீதான அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஈரான் முன் வரவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்,

அமெரிக்காவின் பெரும் கடற்படை ஈரான் நோக்கி பயணிப்பதாகவும், விமானம் தாங்கி போர்க்கப்பலான 'ஆப்ரஹாம் லிங்கன்' இந்த படையை வழிநடத்துவதாகவும், வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விட இது மிகப்பெரிய படை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வெனிசுலாவை போல விரைவில் ஈரானும் தங்களுடன் உடன்படிக்கைக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறி அவர் ஈரானை மிரட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்