இலங்கை அதிபருடன் சீன தூதர் சந்திப்பு - "சீன திட்டங்கள் மூலம் அதிக நன்மை பெறுவதே நோக்கம்"

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதர் கியி சென்ஹோங், தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Update: 2020-11-20 05:32 GMT
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதர் கியி சென்ஹோங், தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்காக, அதிபர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தனது நற்சான்றுப் பத்திரத்தை அவர் அளித்தார். பின்னர், இருவரும் உரையாடினர். அப்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்து வரும் ஒத்துழைப்பு, நட்புறவு குறித்து கோட்டபய ராஜபக்சே மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் சீனாவின் ஆதரவுடன் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அதிக வருமானம் மற்றும் தொழில்வாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளதாக தெரிவித்த கோட்டபய, தனது அதிபர் பதவிக்காலம் முடிவதற்குள் சீனாவின் இந்த திட்டங்கள் மூலம் அதிகபட்ச நன்மைகளை பெற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்று கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்