"மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப் பெற்ற மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-06 10:18 GMT
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  மதுரை மாவட்டம் மேலமடையை சேர்ந்த மோகன் என்பவரது மகள் நேத்ராவின் கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களின் உதவிக்காக பயன்படுத்தியதை முதலமைச்சர் பாராட்டியுள்ளார். தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவை பாராட்டுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துள்ள, மாணவி நேத்ரா, ஐ.ஏ.எஸ் ஆவதே தமது விருப்பம் என கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்