இன்றைய தலைப்பு செய்திகள் (08-05-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-05-08 06:20 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை..

சாலையில் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் மக்கள் மகிழ்ச்சி..

தமிழகத்தில் கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை..

கோடை வெப்பம் வாட்டி வதைத்துவந்த நிலையில், திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி.

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசும் பிரதமர் மீது நடவடிக்கைக் கோரி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு..

குறைகளை நிவர்த்தி செய்து

மீண்டும் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, கலைமதி அமர்வு உத்தரவு..

விழுப்புரம் வாக்கு எண்ணும் மையத்தில் இவிஎம் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் பரபரப்பு.

திடீர் மழை மற்றும் இடி, மின்னல் காரணமாக 7 கேமராக்கள் பழுதானதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் எலும்புகள் டிஎன்ஏ சோதனைக்காக மதுரைக்கு அனுப்பிவைப்பு..

ஒரு வாரத்திற்குள் தடய அறிவியல் அறிக்கை வந்தவுடன் மகனுடைய டிஎன்ஏ உடன் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடிவு எனத் தகவல்..

Tags:    

மேலும் செய்திகள்