புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

Update: 2020-05-30 12:41 GMT
பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது. கோவாவில் தயாரிக்கப்பட்ட இந்த படகு சுமார் 26 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்டது.  ஒரே நேரத்தில் 75 பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் படகு  வடிவமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைகளை பார்வையிட சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்காக குளிர்சாதன வசதி கொண்ட இந்த படகு பயன்படுத்தப்பட உள்ளது. ஊடங்குக்குப்பின் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த படகு போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்