விவசாயிகளை வைத்து மோடியை அடித்த பிரியங்கா

Update: 2024-05-26 17:42 GMT

விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் உணர்வை மோடி அரசு மதிக்கவில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவில் விவசாயிகளை மதிக்கும் பாரம்பரியம் இருந்து வருகிறது என்றார். ஆனால், மோடி அரசு, விவசாயிகளை மதிக்கவோ, அவர்களின் நலனுக்காக கொள்கைகளை உருவாக்கவோ இல்லை குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்கு எதிராக

மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தபோது எதிர்த்த விவசாயிகளை, பயங்கரவாதிகள், துரோகிகள் என்று அழைத்ததாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி ஒருமுறை கூட விவசாயிகள் பேச்சைக் கேட்கவில்லை என்றும் கூறினார். விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மக்களின் உணர்வை மோடி அரசு மதிக்கவில்லை என்ற பிரியங்கா காந்தி,

தேர்தல் மேடைகளில் பிரதமர் நரேந்திர மோடி, பொதுப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதே இல்லை என்று குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்