கொட்டி தீர்த்த கனமழை.. மூழ்கிய தரைப்பாலம்.. முழிக்கும் மக்கள் | Thanthitv

Update: 2024-05-26 17:37 GMT

கன்னியாகுமரியில், பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குழித்துறை தரைப் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக பெய்துவரும் கனமழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து 2,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குழித்துறை தரைப்பாலம் மூழ்கி உள்ளது. பாதுகாப்பு கருதி ஆற்றின் மேற்பகுதியில் பேரிகார்டு தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஒருசிலர் பேரி கார்டுகளைத் தாண்டி தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்