நீர் இருந்தும் பயனற்று போன அணை : பாலைவனம் போல் காட்சி அளிக்கும் விளைநிலம்

மணப்பாறை அருகில் உள்ள பொன்னணியாறு அணையை தூர்வாரி, பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-06-12 11:28 GMT
செம்மலை, பெருமாள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, இந்த அணை மூலம், கரூர், திருச்சி ஆகிய இரு மாவட்டங்களில்  2 ஆயிரத்து 101 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாசனவசதி பெற்று வந்தன. கடந்த ஏழு ஆண்டுகளாக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், அங்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அணையின் முழுக்கொள்ளளவான 51 அடியில் 10 அடி வரை சேறும் சகதியுமாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தமிழக அரசு, பொதுப்பணித்துறை அதிகாரிகள், கவனம் செலுத்தி பயனற்று கிடக்கும் பொன்னணியாறு அணையை தூர்வாரி, தண்ணீர் சேமித்து வைத்து, பாசன பயன்பாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என்பதே மணப்பாறை விவசாயிகளின் வேண்டுகோளாகும்.  
Tags:    

மேலும் செய்திகள்