உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள்

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

Update: 2018-12-07 11:25 GMT
சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முதல் இருபது இடங்களில், 17 இடங்களை இந்திய நகரங்கள் பிடித்துள்ளன.பட்டியலின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும், ஹைதராபாத் நான்காவது இடத்திலும் உள்ளது. ஆறாவது இடத்தில் திருப்பூரும், எட்டாவது இடத்தில் திருச்சியும் உள்ளது. இந்தப்பட்டியலில் சென்னைக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்