பெங்களூருவை வீழ்த்தியது ஐதராபாத் - 4 வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்

ஐ.பி.எல் 52 வது லீக் ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொண்ட ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Update: 2020-11-01 07:48 GMT
டாஸ் வென்று பந்து வீச தீர்மானித்த ஐதராபாத் அணி, பெங்களூருவை 120 ரன்களில் சுருட்டியது. ஐதராபாத் அணியின் சந்தீப் ஷர்மா மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், தமிழக வீர‌ர் நடராஜன் 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் குறைந்தபட்ச ரன் விட்டுக்கொடுத்த 3 வது வீர‌ர் என்ற பெருமையை பெற்றார் நடராஜன். தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி, சஹா 39 ரன்கள் எடுத்தார். இறுதியாக வந்த ஜேசன் ஹோல்டர் அதிரடியாக மூன்று சிக்சர்கள் பறக்க விட 14 வது ஓவரிலே ஆட்டம் முடிந்த‌து. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பஞ்சாபை பின்னுக்கு தள்ளி புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்