புதிய வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ் அணி | IPL 2024 | Punjab Kings

Update: 2024-04-27 07:33 GMT

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 262 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து, பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகில் எந்தவொரு டி20 போட்டியிலும் அதிக ரன்கள் சேஸ் செய்யப்பட்ட போட்டி என்ற பெருமையை இது பெற்றது. இதற்கு முன்னதாக கடந்த 2023-ஆம் ஆண்டில் சென்சூரியனில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 259 ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. மேலும் இந்த போட்டியில் 42 சிக்சர்கள் அடிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்