"உள்ளாட்சி தேர்தலை 2 மாத காலத்திற்குள் நடத்தவில்லை என்றால் போராட்டம்" - அரசியல் கட்சியினர் எச்சரிக்கை

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-08-18 14:22 GMT
புதுச்சேரி மாநிலத்தில் 2011ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மே-மாதம் 8-ந் தேதி புதுச்சேரி  வார்டுகளை 4-வாரத்திற்குள் சீரமைத்து 8-வாரத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையர் பதவியை விண்ணப்பம் மூலம் நியமனம் செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் உள்ளாட்சி ஆணையர் நியமிப்பது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட அறிவிப்பை சபாநாயகர் சிவகொழுந்து ரத்து செய்தார். இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற அதிகாரியான பாலகிருஷ்ணன் என்பவரை மாநில அரசு நியமனம் செய்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்