கருப்பு, சிவப்பு நிறத்துக்கு எந்த கட்சியும் உரிமை கோர முடியாது - உயர் நீதிமன்றம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் கொடி அதிமுக கட்சி கொடி போல் உள்ளதால் அதனை பயன்படுத்த தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2018-11-08 12:07 GMT
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் கொடி அதிமுக கட்சி கொடி போல் உள்ளதால் அதனை பயன்படுத்த தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தினகரன் தரப்பில்  கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கருப்பு , சிவப்பு வண்ணத்தை கொடியில் பயன்படுத்த எந்த கட்சியும் ஏகபோக உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி கல்யாணசுந்தரம் 2 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்