நதிகளில் தூக்கி எறியப்படும் உடல்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு கண்டிப்பு

கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை, கங்கை நதியில் வீசி வருவதை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-05-17 03:36 GMT
நாட்டில் கொரோனா தொற்றுக்கு பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் இறந்தவர்களின் உடல்கள் ஓரளவு எரிந்த அல்லது சிதைந்த நிலையில் மிதந்து வருகின்றன. இத்தகையை நடவடிக்கையில் மக்கள் ஈடுபடக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை நதிகளில் வீசியெறிவது விரும்பத்தகாத செயல் மற்றும் ஆபத்தான நடவடிக்கை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜல் சக்தி  அமைச்சக  செயலாளர் பங்கஜ் குமார், இதுதொடர்பாக  உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். கங்கை மற்றும் துணை நதிகளில் வீசியெறியப்பட்ட உடல்களை  கண்ணியத்துடன் அகற்றி முறைப்படி அடக்கம் செய்வதுடன், நதி நீரின் தரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நீர் ஆணையம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் தங்களின் கருத்து மற்றும் செயல் திட்டங்களை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்