விஸ்வரூபம் எடுக்கும் பிரஜ்வல் விவகாரம்.. "ஆபாச வீடியோக்களை பரப்பியது இவர் தான்.." பகீர் கிளப்பும் பாஜக நிர்வாகி

Update: 2024-05-07 04:47 GMT

கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்தவர் பாஜக நிர்வாகியும் வழக்கறிஞருமான தேவராஜே கவுடா. இவர், 2023 டிசம்பரில் மாநில பாஜக தலைவர் விஜயேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து தகவல் அளித்து, ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தற்போது இந்த ஆபாச வீடியோக்களை பரப்பியதற்கு பின்னால் டி.கே.சிவக்குமார் இருப்பதாக, தேவராஜே கவுடா குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைவர் சிவராமே கவுடாவின் போன் மூலம் டி.கே.சிவக்குமார் தன்னிடம் பேசியதாகவும், எங்களுடன் சேருங்கள் என்று கூறியதாகவும் தெரிவித்தார். எஸ்.ஐ.டி. முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்தபோது, ​​டி.கே.சிவக்குமார் மீதான குற்றச்சாட்டை நீக்குமாறு எஸ்ஐடியின் எஸ்பி கேட்டுக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால், இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் தேவராஜ கவுடா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்