AI மூலம் வெளியான டான்ஸ் வீடியோக்கு பிரதமர் மோடி போட்ட ட்வீட்

Update: 2024-05-07 04:40 GMT

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பிரதமர் மோடி நடனமாடுவது போன்று வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணா என்ற நபர் வீடியோவை வெளியிட்டு, இந்த வீடியோவை பகிர்வதற்காக, தன்னை கைது செய்யும் அளவுக்கு 'சர்வாதிகாரி' செல்ல மாட்டார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, தான் ஆடுவதைப் பார்த்து மற்றவர்களைப் போன்று மகிழ்ந்த‌தாக கருத்து தெரிவித்துள்ளார். உச்சகட்ட தேர்தல் காலத்தில், இத்தகைய படைப்பாற்றல் உண்மையில் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். முன்னதாக, இதே போன்று மேற்கு வங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி ஆடுவது போன்று AI வீடியோ பகிர்ந்த நபருக்கு, கொல்கத்தா சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வீடியோவை பகிர்ந்த நபரிடம் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும், பெயர், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. பிரதமர் மோடி நகைச்சுவையாக எடுத்துக்கொண்டுள்ள நிலையில், மேற்கு வங்க காவல்துறை நடவடிக்கை பாயும் என எச்சரித்திருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்