Peps Mattress | 20வது ஆண்டை நிறைவு செய்த பெப்ஸ் மெத்தை தயாரிப்பு நிறுவனம்
பெப்ஸ் நிறுவனத்தின் இந்த கொண்டாட்டத்தில், தங்கள் பயணத்தின் முதுகெலும்பாக இருந்த வாடிக்கையாளர்கள், டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு, பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் ஷங்கர் ராம் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக விற்பனையாகும் ஸ்பிரிங் மெத்தையை அறிமுகப்படுத்துவதில் இருந்து, முழுமையான தூக்க தீர்வுக்கான ஒரு பிராண்டாக பெப்ஸ் மாறியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். புதுமை, தரம் என, லட்சக்கணக்கான வீடுகளின் தேவையை பெப்ஸ் கொண்டு சென்று கொண்டுள்ளதாகவும், பெப்ஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஷங்கர் ராம் குறிப்பிட்டுள்ளார்.