தமிழகத்தில் வீசிய சூறைக்காற்று...வேரோடு சாய்ந்த மரங்கள் - பரபரப்பு காட்சிகள்

Update: 2024-05-07 04:44 GMT

தமிழகத்தில் வீசிய சூறைக்காற்று...வேரோடு சாய்ந்த மரங்கள் - பரபரப்பு காட்சிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால், ஏராளமான வாழை மரங்கள் மற்றும் பப்பாளி மரங்கள் முறிந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், 200 ஏக்கர் அளவிலான வாழை மரங்கள் முறிந்தன. இதற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியில் சூறைக்காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பகுதியில் மொத்தமாக நான்காயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக, வருவாய்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீசிய சூறைக்காற்றால், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியில் 700-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்துள்ளது. மேலும் ஏராளமான முருங்கை செடிகள், வாழைமரம், சப்போட்டா, தென்னை ஆகிய மரங்களும் சாய்ந்துள்ளன. சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பப்பாளி மரங்கள் முறிந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்