மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை..78 பேர் பலி - 103 பேர் மாயம்

Update: 2024-05-06 04:18 GMT

பிரேசிலில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 103 பேர் மாயமாகி உள்ளதால், அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ள சேத பாதிப்புகளை, பிரேசில் அதிபர் லுலா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பெரும்பாலான நகரங்களில் சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதாகவும், விரைவில் அவற்றை சீரமைப்பதற்கான பணிகளை அரசு செய்யும் என்றும், அதிபர் லுலா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்