ஒருபக்கம் வாட்டும் வெயில்...மறுபக்கம் ஆலங்கட்டி மழை..வித்தியாசமான காலநிலை.. வியந்து போன மக்கள்

Update: 2024-05-26 11:19 GMT

மெக்சிகோவில் 3வது வெப்ப அலைக்கு மத்தியில் ஆலங்கட்டி மழை பொழிந்து இன்ப அதிர்ச்சி அளித்தது. அந்நாட்டின் 9 மாநிலங்களில் வெப்ப நிலை 113 டிகிரி செல்சியஸ் அளவு கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மெக்சிகோவின் பியூப்லா நகரை ஆலங்கட்டி மழை மற்றும் கடும் புயல் தாக்கியது. நாட்டை வெயில் வாட்டி வரும் நிலையில், பியூப்லா நகர வீதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இருப்பினும் ஆலங்கட்டி மழை பொழிவால் சில வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் மரங்கள் முறிந்து சாலைகளில் கிடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்