ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்ட கிம் ஜாங் உன்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீண்ட தூர ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டார். 200கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமையுடன் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக நடந்தேறிய நிலையில், கிம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். அத்துடன் தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகளை ஏவக்கூடிய 8 ஆயிரத்து 700 டன் எடையிலான அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளையும் கிம் பார்வையிட்டார்.