நாய்கள் பயணம் செய்ய பிரத்யேக விமான சேவை அறிமுகம்

Update: 2024-05-26 17:23 GMT

உலகிலே முதன்முறையாக விமானத்தில் நாய்கள் ஒய்யாரமாக பயணம் செய்யும் வகையில் சகல வசதிகளுடன் பிரத்யேகமாக விமான சேவை அமெரிக்காவில் பார்க் ஏர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்து கொள்ளலாம். நாய்களுக்கு என சவுகரியமான இருக்கை வசதி, படுக்கை வசதி, டயப்பர்களும் வழங்கப்படுகின்றன. டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு 4 லட்ச ரூபாயும், வெளிநாட்டு பயணத்திற்கு 6 லட்சம் ரூபாயும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்