இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (26-05-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 15:52 GMT

டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் ராஜ்கோட் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ள நிலையில், இது மனிதர்களால் ஏற்பட்ட பேரிடர் என நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது... செய்தியாளர் ராஜா வழங்கிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கோப்பையை வெல்லும் முனைப்புடன், கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இதுகுறித்து ரசிகர்களின் கருத்துக்களை கேட்டறிந்தோம்... செய்தியாளர்கள் சமயமணிவண்ணன், பாலாஜி வழங்கிய தகவல்கள் இவை.

தீவிரமடைந்துள்ள ரீமால் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் அடுத்துவரும் நாட்களில், வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களை விவரிக்கிறார் செய்தியாளர் ரமேஷ்....

Tags:    

மேலும் செய்திகள்