ஆள் கடத்தல் வழக்கு...பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை கொடுங்கையூரில், ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-31 01:58 GMT
சென்னை கொடுங்கையூரில், ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி யஷ்வந்த் ராவ் கைது செய்யப்பட்டார்.

கொடுங்கையூர் காவேரி சாலையை சேர்ந்த வெங்கட் சங்கானி, தலைமை செயலக காலனி பராக்கா சாலையில் உள்ள, சென்னை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கடையை, குப்பன் என்பவரிடம் வாடகைக்கு எடுத்து, பிரியாணி கடை  நடத்தி வந்துள்ளார். கொரோனா தொற்றால், வாடகை தொகையை செலுத்த முடியவில்லை. ஆத்திரமடைந்த குப்பன் வியாசர்பாடியில் காவலராக பணியாற்றிய தனது மகன் செந்திலை வைத்து, ஒரு கும்பலுடன் சென்று வெங்கட் சங்கானியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இவரது வீட்டிற்கு வந்த ஓரு கும்பல், போலீஸ் என்று கூறி வெங்கட் சங்கானியை காரில் கடத்தி சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த வெங்கட் சங்கானி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதில் தொடர்புடைய, பிரபல ரவுடி யஷ்வந்த் ராவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 7 பேரை  தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்