10 மாத குழந்தையை கடித்த நாய்... சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி

Update: 2024-05-09 01:49 GMT

சென்னை நாவலூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10 மாத குழந்தையை பொமரேனியன் நாய் கடித்ததில் குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் க்ரிஷ். மென்பொறியாளரான இவர், கடந்த சனிக்கிழமை தன் 10 மாத ஆண் குழந்தையை குடியிருப்பு வளாக பூங்கா பகுதியில் விளையாட வைத்துள்ளார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் கனடா குடியுரிமை பெற்ற வேலாயுதன் என்பவர் தன்னுடைய பொமரேனியன் ரக நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தையை நாய் வலது கையில் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன க்ரிஷ், நாய்க்கு தடுப்பூசி போட்ட விபரங்களை கேட்டுள்ளார். ஆனால் நாய் உரிமையாளர் விபரங்களை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனிடையே நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தடுப்பூசி போட்டாலும் கடந்த 2 நாட்களாக குழந்தைகக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்