நாளை காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு

Update: 2024-05-09 01:53 GMT

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (10ம் தேதி) வெளியாகின்றன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா வெளியிட்டுள்ளார். அதன்படி, 10ம்தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும், அனைத்து பள்ளிகளுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய பட்டியல் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்