தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நில பிரச்சனையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் கணவர் கொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தன்தருவை சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் சித்தர் செல்வன். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் தட்டார்மடம் தோட்டத்தில் மறைந்திருந்த கொலையாளி ஜேக்கப் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகிறார். நிலபிரச்னையில் தலையிட்டதின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.