கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்குழியில் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்துக்கொண்ட கல்லூரி மாணவர் உடலின் அருகே, சோகத்தில் நின்ற வளர்ப்பு நாயும் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. 17 வயதான பவித்ரன் வீட்டின் அருகில் உள்ள தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பவித்ரனின் வளர்ப்பு நாய் சடலத்தை சுற்றி வந்து பாசப்போராட்டம் நடத்தியது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே வந்த ரயில் மோதி, பவித்ரனின் வளர்ப்பு நாயும் உயிரிழந்தது.