வைகை அணையில் நீர் திறக்க உத்தரவு - 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-09-21 10:03 GMT
பெரியாறு பாசனப் பகுதியில்  உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் வைகை அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனால், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்