வழக்கறிஞர்கள் சேமநல நிதியை உயர்த்த தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு

வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-09 22:04 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்தனர். அதில், வழக்கறிஞர்கள் சேமநல நிதியை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கவேண்டும்… தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இடம்பெற்று இருந்தது. மேலும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் நிறுவ சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் பார் கவுன்சில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்